இந்தியா

“5 ரூபாய் பிஸ்கட் வாங்க மக்கள் யோசிக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம்” - பிரிட்டானியா நிறுவனர் குமுறல்!

பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக ஐந்து ரூபாய் பிஸ்கட் வாங்க இந்திய கூட மக்கள் யோசிப்பதாக பிரிட்டானியா நிறுவன இயக்குநர் வருண் பெர்ரி தெரிவித்துள்ளார்.

“5 ரூபாய் பிஸ்கட் வாங்க மக்கள் யோசிக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம்” - பிரிட்டானியா நிறுவனர் குமுறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அக்கட்சி தலைவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

ஆனால் பா.ஜ.கவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பின்னடைவை இந்திய பெருளாதாரம் சந்தித்து வருகிறது. இதனை மூடிமறைக்கப் பல வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டாலும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை பற்றி வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பா.ஜ.க அரசினால் சிறுகுறு தொழில்கள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளன. குறிப்பாக கடுமையான வீழ்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறையில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் உணவு உற்பத்தியில் பெரும் லாபம் ஈட்டிவரும் பிரிட்டானியா நிறுவன இயக்குநர், ”பொருளாதார விழ்ச்சியினால் மக்களால் ஐந்து ரூபாய் உணவு பண்டங்களைக்கூட வாங்க முடியவில்லை.” என வருத்துத்துடன் தெரிவித்துள்ளார்.

வருண் பெர்ரி
வருண் பெர்ரி

இதுகுறித்து பிரிட்டானியா நிறுவன இயக்குநர் வருண் பெர்ரி கூறுகையில், “இந்திய அளவில் எங்களது பிஸ்கட் நிறுவனம் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. அதாவது நாட்டில் விற்பனையாகும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு எங்களுடைய உற்பத்திதான்.

அதனால் வழக்கமான லாபம் ஆண்டுக்கு, 7 சதவீதம் முதல் 11 சதவீதம் என்ற அளவில் உயரும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் வளர்ச்சி அடி ஆழத்துக்கு சென்றுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ள மறைமுகத் தாக்கமாகவே தெரிகிறது.

சந்தையில் உணவு பொருட்களின் விலை, சிறிய தொகை என்றாலும் மொத்த நுகர்வைப் பார்க்கும் போது அது பெரும் லாபத்தை தரும். இந்த லாபம் தற்போது குறைந்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபாயை செலவு செய்து, பிஸ்கட் வாங்க பலமுறை யோசிக்கின்றனர். இந்த நிலைமை இன்னும் ஓர் ஆண்டுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“5 ரூபாய் பிஸ்கட் வாங்க மக்கள் யோசிக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம்” - பிரிட்டானியா நிறுவனர் குமுறல்!

இது வெறும் பிரிட்டானியா நிறுவனத்திற்கு மட்டும் உருவான பிரச்சனை அல்ல; பல துறை நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை. இப்போதே இந்த நிலைமையை சரி செய்யவேண்டும் இல்லையென்றால் வீழ்ச்சியில் இருந்து தப்பிக்கமுடியாது.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜவுளி துறை, ரியல் எஸ்டேட் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் துறை என அனைத்து துறைகளும் மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories