இந்தியா

காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு விரித்த வலையில் சிக்கிய சித்தார்த்தா : தற்கொலைக்குக் காரணம் பா.ஜ.கவா? 

காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மரணத்துக்கு, பா.ஜ.க செய்த சூழ்ச்சியே காரணம் என தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு விரித்த வலையில் சிக்கிய சித்தார்த்தா : தற்கொலைக்குக் காரணம் பா.ஜ.கவா? 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 2017ம் ஆண்டு குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட அகமது படேலை தோற்கடிக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டது பா.ஜ.க.

காங்கிரஸின் அப்போதைய அமைச்சரும், தொழிலதிபருமான டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 44 பேரை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்திருந்து பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்தார். அப்போதிருந்தே, டி.கே.சிவக்குமார் மீதும், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் குமார் மீதும் பா.ஜ.க அரசு கண் வைத்தது.

தற்போது பா.ஜ.க-வில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்த காலத்திலேயே டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவர். அவரது மருமகன் என்கிற முறையிலும், சக தொழிலதிபர் என்கிற முறையிலும், சித்தார்த்தா சிவக்குமாருக்கு நண்பரானார்.

பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடித்ததற்காக பழிவாங்கும் நோக்கில் பா.ஜ.க அரசு, சிவக்குமார் மீது வருமான வரித்துறையை ஏவியது. 2017-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவுக்கு சொந்தமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் டி.கே.சிவக்குமாரும், சித்தார்த்தாவும் பண பரிமாற்றம் செய்து கொண்டது தொடர்பான ஆவணங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அப்போது முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சித்தார்த்தாவிடம் விசாரணை நடத்தத் தொடங்கினர்.

காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு விரித்த வலையில் சிக்கிய சித்தார்த்தா : தற்கொலைக்குக் காரணம் பா.ஜ.கவா? 

சிவக்குமாருக்கு எதிராக சித்தார்த்தாவைப் பயன்படுத்த பா.ஜ.க முயன்றது. சிவக்குமாரை சிக்கவைக்கும் வகையில் சித்தார்த்தாவிடம் வாக்குமூலம் பெறவும் முயற்சி நடந்துள்ளது. ஆனால், அதற்கு சித்தார்த்தா பணியாததால் அவரது வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன.

வருமான வரித்துறை விதிகளை மீறி, சோதனையின் ஆரம்பத்திலேயே சித்தார்த்தாவின் சொத்துகளை முடக்கியதால், கடனை சரிக்கட்ட சொத்துகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. கடன் நெருக்கடி ஒருபக்கம், வருமான வரித்துறையின் கிடுக்கிப்பிடியால் சொத்தை விற்கமுடியாத நிலை மறுபக்கம் எனச் சிக்கிக்கொண்ட சித்தார்த்தா வேறு வழியற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்ட பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் டி.கே.சிவக்குமார். ஆனாலும், பா.ஜ.க தனது அரசியல் சதியை அரங்கேற்றிவிட்டது. இதையடுத்து பா.ஜ.க-வின் சதியால் தன் மீதான பிடி இறுகுவதை உணர்ந்துகொண்ட சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories