
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி திமுக-வின் தேர்தல் அறிக்கைக் குழு தலைவராக இருந்து அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்க உள்ளார். அதற்கான முதல்கட்ட அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி காலை 11 மணிக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து தனது பிரச்சாரத்தினை தொடங்குகிறார் கனிமொழி எம்.பி. அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், மதுரை தெற்கு மற்றும் மாலை 6 மணிக்கு மதுரை மத்தி தொகுதிகளின் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 3ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளான நத்தம் தொகுதியில் காலை 11 மணிக்கும் ஆத்தூர் தொகுதியில் மாலை 4 மணிக்கும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் மாலை 6 மணிக்கும் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 4ம் தேதி காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை தொகுதியிலும் மாலை 4 மணிக்கு மணச்சநல்லூர் தொகுதியிலும் மற்றும் மாலை 6 மணிக்கு கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியிலும், இரவு 8 மணிக்கு கிருஷ்ணாராயபுரம் தொகுதியிலும் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

முதல்கட்ட பிரச்சார அட்டவணையின் படி கடைசி நாளான ஏப்ரல் 5ம் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கு பல்லடம் தொகுயில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை 6 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தொகுதியிலும், இரவு 8 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதியிலும் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி அவர்கள்.
வேட்பாளர் பட்டியல் வெளியீடு, திமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டை தொடர்ந்து அதிரடியாக திராவிட மாடல் 2.O எனும் இலக்கை நோக்கி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.






