தி.மு.க

“ஜன.,21ல் தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” - பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு!

தி.மு.க. அவசர செயற்குழுக் கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பொதுச்செயலாளர் பேராசிரியர்.

“ஜன.,21ல் தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” - பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திமுக தலைமை செயற்குழுவின் அவசரக்கூட்டம் வருகிற ஜனவரி 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 21ம் தேதி தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணியளவில் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தி.மு.கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories