சினிமா

“அர்ஜுன் தாஸ் உங்களுக்கு தான்..” - காதல் கிசுகிசு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி !

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும், நடிகர் அர்ஜுன் தாஸும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பிய நிலையில், இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

“அர்ஜுன் தாஸ் உங்களுக்கு தான்..” - காதல் கிசுகிசு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளாவை பூர்வேகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 2017-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகனார். தமிழில் 2019-ம் ஆண்டு விஷாலின் ஆக்ஷன் படத்தில் தோன்றினார். தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர், தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார்.

“அர்ஜுன் தாஸ் உங்களுக்கு தான்..” - காதல் கிசுகிசு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி !

தொடர்ந்து தமிழில் அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' மூலம் பூங்குழலியாக ஒட்டுமொத்த இந்தியாவிலே அறிமுகமானார். இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், திரை வட்டாரத்திலே ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

“அர்ஜுன் தாஸ் உங்களுக்கு தான்..” - காதல் கிசுகிசு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி !

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கைதி, மாஸ்டர் படத்தில் மிகப்பெயர் பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸும், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நெருக்கமாக இருக்கும்படி இருந்தது.

இதனை பகிர்ந்ததோடு அதில், வெறும் ஆர்ட்டின் எமோஜியையும் சேர்த்து பகிர்ந்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் இருவரும் காதலிப்பதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் இது பல்வேறு ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

“அர்ஜுன் தாஸ் உங்களுக்கு தான்..” - காதல் கிசுகிசு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி !

இவர்களது புகைப்படம் வைரலாகி ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், மறுபக்கம் பெண் ரசிகர்கள் அர்ஜுன் தாஸுக்காகவும், ஆண் ரசிகர்கள் ஐஸ்வர்யாக்காகவும் மிகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த செய்தி வைரலானதையடுத்து இது குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பகிர்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“அர்ஜுன் தாஸ் உங்களுக்கு தான்..” - காதல் கிசுகிசு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி !

அதில், "என்னுடைய கடைசி பதிவு இந்த அளவுக்கு பேசுபொருள் ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் எதர்ச்சியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது போட்டோ எடுத்து பதிவிட்டேன். எங்களுக்குள் எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நேற்றிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்பும் அர்ஜுன் தாஸ் ரசிகர்களே, அவர் உங்களுக்கு தான்” என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“அர்ஜுன் தாஸ் உங்களுக்கு தான்..” - காதல் கிசுகிசு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி !

இருப்பினும், ஆரம்பத்தில் எல்லோரும் இப்படிதான் சொல்வார்கள்.. போக போகதான் தெரியும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவரது புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா லட்சுமிக்கு இந்தாண்டு கிறிஸ்டோபர், கிங் ஆப் கோதா என்ற மலையாள படங்களும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories