சினிமா

துணிவு ட்ரைலர் : “பணம்.. பவர்.. ஆர்டர்.. செய்றோம்..” - ஆண்டு இறுதியில் அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்..

அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது .

துணிவு ட்ரைலர் : “பணம்.. பவர்.. ஆர்டர்.. செய்றோம்..” - ஆண்டு இறுதியில் அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம்தான் 'துணிவு'. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வைசாக் பாடலசரியாக உள்ளார்.

துணிவு ட்ரைலர் : “பணம்.. பவர்.. ஆர்டர்.. செய்றோம்..” - ஆண்டு இறுதியில் அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்..

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதுகிறது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை இரண்டு படக்குழுவினரும் வாரிவாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் துணிவின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் என துணிவு குழுவினர் அறிவித்த நிலையில், வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

துணிவு ட்ரைலர் : “பணம்.. பவர்.. ஆர்டர்.. செய்றோம்..” - ஆண்டு இறுதியில் அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்..

பின்னர் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாரிசின் அடுத்த பாடலான 'தீ..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், துணிவு படத்தின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இது வெளியாகி இரண்டு நாளில் வாரிசின் மூன்றாம் பாடலான 'அம்மா..' பாடல் வெளியாகியது.தொடர்ந்து வாரிசு படம் தனது ஆடியோ லான்ச்சை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் அதிகமான சுவாரஸ்யங்கள் அரங்கேறியது. மேலும் ஆடியோ வெளியீடு துவங்குவதற்கு முன்பே, விஜய் ரசிகர்கள் - அஜித் ரசிகர்களை தாக்கி பேனர் ஒன்றை தூக்கி பிடித்தனர்.

துணிவு ட்ரைலர் : “பணம்.. பவர்.. ஆர்டர்.. செய்றோம்..” - ஆண்டு இறுதியில் அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்..

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை வெறுப்பேத்த, உடனே அவர்களும் அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மற்றொரு பேனரையும் அடித்தனர். வாரிசு இசை வெளியீடு முடிந்த அடுத்த நாளே, துணிவின் மூன்றாம் பாடலான 'Gangstaa' பாடல் வெளியானது.

துணிவு ட்ரைலர் : “பணம்.. பவர்.. ஆர்டர்.. செய்றோம்..” - ஆண்டு இறுதியில் அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்..

மேலும் துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டி, அதன்படி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர். அதோடு துணிவு குழு தங்கள் படத்தின் ட்ரைலரை இந்தாண்டு இறுதி, அதாவது வரும் 31-ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதற்காக நேற்று துணிவு படத்திலுள்ள முக்கிய நடிகர்களின் கதாபாத்திர பெயர்களை வெளியிட்டது. அதில் அஜித் பெயரை மட்டும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் காட்டியுள்ளது. இந்த நிலையில், தற்போது துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இது இந்திய MONEY HEIST என்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories