சினிமா

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் நடிகர் நாசர் அனுமதி!

படப்பிடிப்பின் போது நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் நடிகர் நாசர் அனுமதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாகத் தனது குணச்சித்திர நடிப்பால் கோலோச்சி வருகிறார் நடிகர் நாசர். நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர், டப்பிங் கலைஞர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

’பாகுபலி’ படத்தில் தன் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படி இவர் நடித்த படங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். எந்த படத்தில் நடித்தாலும் தன் கதாபாத்திரத்தை ஏற்றுச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் நாசர் வல்லவர்.

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் நடிகர் நாசர் அனுமதி!

அண்மையில் உடல்நிலை பிரச்சனையால் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், 'என் மூச்சு இருக்கும் வரை நான் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன்' என அறிக்கை விட்டு வதந்திக்கு முற்றுபுள்ளிவைத்தார்.

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் நடிகர் நாசர் அனுமதி!

இந்நிலையில், தெலங்கான போலிஸ் அகாடமியில் நடந்த படப்பிடிப்பிற்கு நடிகர் நாசர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட விபத்தில் நடிகர் காயம் அடைந்துள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு குழுவினர் அவரை அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது நடிகர் நாசர் நலமுடன் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories