சினிமா

இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன சிம்பு - குவியும் பாராட்டுக்கள் !

பன்னாட்டு மது விளம்பரத்தில் நடிக்க நடிகர் சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளியான தகவல்களையடுத்து அவரது ரசிகர்கள் சிம்புவை கொண்டாடி வருகின்றனர்.

இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன சிம்பு - குவியும் பாராட்டுக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சிலம்பரசன். உள் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் ரசிகர்களை கொண்டுள்ள இவர், தனது ரசிகர்களை சந்திக்கும்போதெல்லாம், அவர்களுக்கு மாஸாக கருத்து தெரிவித்து வருவார்.

இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன சிம்பு - குவியும் பாராட்டுக்கள் !

சமீபத்தில் பல தோல்வி படங்களை கொடுத்த போதெல்லாம் அவரது உடலமைப்பு தான் அதற்கு காரணம் என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், அண்மையில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தின் மூலமாக தனது பழைய ஸ்டைலில் come back கொடுத்த சிம்பு, 'மாநாடு' படம் முதல் வெற்றிகளை குவிக்க தொடங்கியுள்ளார்.

இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன சிம்பு - குவியும் பாராட்டுக்கள் !

தற்போது இயக்குநர் ஜி.வி.எம், இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் வரும் செப்டம்பர் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து தற்போது 'பத்து தல', திரைப்படத்தில் நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.

இதனிடையே தனியார் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கினார்.

இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன சிம்பு - குவியும் பாராட்டுக்கள் !

இந்த நிலையில், இவர் மது தொடர்பான விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல பன்னாட்டு மது நிறுவனம் அதன் விளம்பரத்தில் நடிக்க நடிகர் சிம்புவை அணுகியுள்ளது. மேலும் அவருக்கு அதற்காக பல லட்சம் தரவும் தயாராக இருந்துள்ளது. ஆனால் அதற்கு சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை நடிகர் சிம்பு கைவிட்டதால் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories