சினிமா

மலையாள சினிமாவில் இதுவே முதல்முறை.. சாதனை படைத்த ஹிருதயம் தர்ஷனா பாடல்...!

மலையாள சினிமாவில் இதுவே முதல்முறை.. சாதனை படைத்த ஹிருதயம் தர்ஷனா பாடல்...!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வினித் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் ப்ரனவ் மோகன்லால் ஹீரோவாக அறிமுகமான மலையாள படம் ‘ஹ்ரிதயம்’.

இதில் ப்ரனவிற்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் தர்ஷனா நடித்திருந்தனர். கல்லூரி காலம் துவங்கி திருமண வாழ்வு வரை வாழ்வின் அழகியலை எதார்த்தம் குறையாமல் காட்டப்பட்ட இந்த படத்திற்கு மொழிகள் கடந்து அனைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

அதில், அப்துல் வாஹப் இசையில் இந்த படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தர்ஷனா பாடல் இளைஞர்கள் மத்தியில் ராக கீதமாகவே திகழ்ந்து வருகிறது. யூட்யூப்பில் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories