அரசியல்

“தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

“அந்நியர் ஆட்சிக்கு எதிரான கனலை மக்கள் மனதில் விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்துக்குத் தலைவணங்குகிறேன்” என அவரது நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

“தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

வீரபாண்டியன் கட்டபொம்மனின் நினைவுநாளையொட்டி இன்று (அக்டோபர் 16) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

தூக்குமேடைக்கு நடந்து செல்லும்போதும் துணிச்சலோடும் கர்வத்தோடும் சென்ற விடுதலைப் போராளி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள்!

மானம்தான் பெரிதென வாழ்ந்து, அந்நியர் ஆட்சிக்கு எதிரான கனலை மக்கள் மனதில் விதைத்த அவரது வீரத்துக்குத் தலைவணங்குகிறேன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு நமது திராவிட மாடல் அரசில் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திருவுருவச் சிலை அமைத்ததுடன், மதுரையில் திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்துக்கும் அவரது பெயரைச் சூட்டிப் பெருமை கொண்டோம்!

தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க! என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories