சினிமா

எடிட்டர் To இயக்குநர்: ’விக்ரம்’ ரிலீஸுக்கு முன்பே வெளியான கமலின் அடுத்த பட அப்டேட்!

எடிட்டர் To இயக்குநர்: ’விக்ரம்’ ரிலீஸுக்கு முன்பே வெளியான கமலின் அடுத்த பட அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் உடன் பணியாற்று திரைப்படத் துறையில் எவருமே விரும்புவர். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான படத்தை படத்தொகுப்பு செய்தவரே அவரை இயக்கும் வாய்ப்பு இயக்குநரும் எடிட்டருமான மஹேஷ் நாராயணனுக்கு கிட்டியிருக்கிறது.

கமல்ஹாசனே இயக்கி, நடித்து 2013ல் வெளியான விஸ்வரூபம் மற்றும் 2018ல் வெளியான விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் எடிட்டர்தான் மஹெஷ் நாராயணன். இவர் மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலை வைத்து டேக் ஆஃப், சி யு சூன், மாலிக் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது மஹேஷ் நாராயணன் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளில் பணியாற்றும் திறம்படைத்த மஹேஷ் நாராயணன் கமல்ஹாசனை இயக்குவதாக வெளியான தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

விரைவில் இவர்களது கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே மஹேஷ் நாராயணன் கமல்ஹாசன் இணையும் இந்த படத்தில் விக்ரம் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் முன்பே தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories