சினிமா

உலகத் தரத்தில் தயாராகும் மோகன்லாலின் Barroz.. மிரள வைத்த ஸ்டில்ஸ்.. அதிசயித்துப்போன ரசிகர்கள்!

உலகத் தரத்தில் தயாராகும் மோகன்லாலின் Barroz.. மிரள வைத்த ஸ்டில்ஸ்.. அதிசயித்துப்போன ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராகவும் இருப்பவர் மோகன்லால்.

அவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தென்னிந்தியாவை கடந்து தேசிய அளவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருகும்.

இந்த நிலையில், ஆசிர்வாத் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பிலும் மோகன்லால் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, ஒரு பிரமாண்டமான periodic படத்தை தானே இயக்கி, நடித்து, தயாரிக்கவும் செய்கிறார்.

அந்த படத்திற்கு Barroz (பர்ரோஸ்) எனவும் தலைப்பிடப்பட்டிருக்கிறது. இது 3D தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளான ரசிகர்கள், உலக தரத்தில் படம் அமையப்போகிறது எனவும் நெகிழ்ச்சி ததும்ப பதிவிட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து பர்ரோஸ் படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories