சினிமா

’அது கண்ணா? இல்லை கரென்ட்டா?’ - வெளியானது கத்தீஜா ராம்போவின் லவ் ஸ்டோரி.. 5in1_cinema துளிகள்!

’அது கண்ணா? இல்லை கரென்ட்டா?’ - வெளியானது கத்தீஜா ராம்போவின் லவ் ஸ்டோரி.. 5in1_cinema துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளியானது `காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் நான்காவது பாடல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்திருக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் ரிலீஸூக்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்தப் படத்திலிருந்து டீசரும் மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்போது அடுத்த பாடலாக `திபம் தபம்' என்ற பாடலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

`குலு குலு' படத்தின் ஷூட்டிங் நிறைவு!

மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர் ரத்னகுமார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும், கமல்ஹாசன் நடித்திருக்கும் `விக்ரம்' படத்திலும் கதையாக்கத்தில் பணியாற்றினார். இதற்கு அடுத்தாக சந்தானம் நடிப்பில் `குலு குலு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. கூடவே படத்திற்கான டப்பிங் பணிகளும் நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக நிறைவடைந்துள்ளது என அறிவித்துள்ளனர். இதுதவிர சந்தானம் நடித்த `ஏஜென்ட் கண்ணாயிரம்' படமும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.

`கைதி' படத்தின் இந்தி ரீமேக் `போலா'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ல் வெளியான படம் `கைதி'. இந்தப் படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இதன் இந்தி ரீமேக் பணிகள் துவங்கப்பட்டது. இந்த ரீமேக்கிற்கு `போலா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கிறார். தபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தர்மேந்திரா ஷர்மா இயக்கத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது இந்த `போலா'.

நானியின் `அன்டே சுந்தரானிகி' பட டீசர் வெளியானது!

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம் நடித்திருக்கும் தெலுங்குப் படம் `அன்டே சுந்தரானிகி'. இந்தப் படத்திலிருந்து நானி மற்றும் நஸ்ரியாவுக்கான டீசர் ஏற்கெனவே வெளியானது. விவேக் சாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து `பஞ்ச கட்டு' என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டனர்.

தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். தமிழில் இந்தப் படத்திற்கு `அடடே சுந்தரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தை ஜூன் 10ம் தேதி வெளியிட உள்ளனர்.

`அசோக வனம்லோ அர்ஜூன கல்யாணம்' பட டிரெய்லர்

வித்யாசாகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `அசோக வனம்லோ அர்ஜூன கல்யாணம்'. விஷ்வாக் சென், ருக்ஷர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரிலீஸூக்கு தயாராகிவிட்டாலும் வெளியிடாமல் இருந்தனர். கடந்த மார்ச் 4ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு கூட வெளியானது. ஆனால், தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானதால், ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்தப் படம் மே 6ம் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது அதற்காக ஒரு டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

banner

Related Stories

Related Stories