சினிமா

#5in1_Cinema | இணையத்தைக் கலக்கும் புது ஜோடி... தாத்தா - அப்பா - மகன் நடிக்கும் படம் ஏப்ரல் 21ல் ரிலீஸ்!

விஷால் நடிக்கும் `லத்தி' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

#5in1_Cinema | இணையத்தைக் கலக்கும் புது ஜோடி... தாத்தா - அப்பா - மகன் நடிக்கும் படம் ஏப்ரல் 21ல் ரிலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. பூஜையுடன் துவங்கியது விஜய்யின் 66வது படம் - இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்!

`பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இது விஜயின் 66வது படமாக உருவாகிறது. நேற்று இந்தப் படத்தின் நாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார் என்றும் தமன் இசையமைக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. இன்று இந்தப் படத்தின் பூஜை நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி, நடிகர் விஜய், நாயகி ராஷ்மிகா உடன் சரத்குமார், ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடன இயக்குநர் ஷோபி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

2. விஷால் நடிக்கும் `லத்தி' பட போஸ்டர் வெளியானது!

`வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் `லத்தி'. இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். அறிமுக வினோத்குமார் இயக்கும் இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து `ராணா' என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

3. வெளியானது விஜய் ஆண்டனியின் `கொலை' பட போஸ்டர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் `கொலை'. பாலாஜி குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜனவரி மாதமே இதன் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இப்போது படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

4. ஏப்ரல் 21ல் வெளியாகும் `ஓ மை டாக்'

சரோவ் ஷண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஓ மை டாக். இந்தப் படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது. இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கதையாக உருவாகியுள்ளதால், நிஜத்தில் தாத்தா அப்பா மகன் உறவுகளான நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜயின் மகன் அர்னவ் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தப் படம் ஏப்ரல் 21ஆம் தேதி அமேஸான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. சன்னி லியோன் நடிக்கும் `ஓ மை கோஸ்ட்' பட போஸ்டர் வெளியீடு!

தமிழில் `சிந்தனை செய்' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் யுவன். தற்போது இவர் `ஓ மை கோஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சன்னி லியோன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் சதிஷ், தர்ஷா குப்தா, மொட்ட ராஜேந்திரன், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் சென்ற வருட இறுதியிலேயே நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

banner

Related Stories

Related Stories