சினிமா

5in1_Cinema | 2 ஆண்டுகளுக்கு பிறகு த்ரில்லர் படம் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. அண்மை தகவல் இதோ!

5in1_Cinema | 2 ஆண்டுகளுக்கு பிறகு த்ரில்லர் படம் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. அண்மை தகவல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷை இயக்கும் எம்.ராஜேஷ்

ஜெயம் ரவி தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் `அகிலன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த பின் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரவி. இந்தப் படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

5in1_Cinema | 2 ஆண்டுகளுக்கு பிறகு த்ரில்லர் படம் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. அண்மை தகவல் இதோ!

தற்போது ஹன்சிகாவை வைத்து ராஜேஷ் இயக்கிவரும் வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. இதனை முடித்துவிட்டே ரவியின் படத்திற்கு வருகிறார் ராஜேஷ். இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ஏப்ரல் 6ல் நானியின் `அன்டே சுந்தரானிகி' பட பாடல்!

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம் நடித்திருக்கும் படம் `அன்டே சுந்தரானிகி'. இந்தப் படத்திலிருந்து நானி மற்றும் நஸ்ரியாவுக்கான டீசர் ஏற்கெனவே வெளியானது. படத்தை ஜூன் 10ம் தேதி வெளியிட உள்ளனர்.

விவேக் சாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து `பஞ்ச கட்டு' என்ற பாடல் ஏப்ரல் 6ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது அதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் படம்!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. 2020ல் வெளியான `நிஷப்தம்' படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது இவர் பி.மகேஷ் பாபு இயக்கத்தில் ஒரு தெலுங்குப் படம் நடிக்க இருக்கிறார்.

5in1_Cinema | 2 ஆண்டுகளுக்கு பிறகு த்ரில்லர் படம் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா.. அண்மை தகவல் இதோ!

த்ரில்லர் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியிருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் நவீன் போலிஷெட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தம் படம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

டொவினோ தாமஸ் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மலையாளத்தில் `அனுராக கரிக்கின் வெள்ளம்', `உண்டா', `லவ்' போன்ற படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். தற்போது இவர் டெவினோ தாமஸ், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

`தல்லு மாலா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதையை முஷின் பராரி மற்றும் அஷ்ரஃப் ஹம்ஸா எழுதியுள்ளனர். விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

‘ஆப்ரேஷன் ரோமியோ’ இந்தி பட டிரெய்லர்

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷேன் நிஹம், ஆன் ஷீத்தல் நடித்து 2019ல் வெளியான மலையாளப் படம் `இஷ்க்'. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பினால் தெலுங்கிலும் `இஷ்க்' என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. `ஆப்ரேஷன் ரோமியோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரீமேக்கை ஷ்ஷாந்த் ஷா இயக்கியுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது இந்தப் படம். தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

banner

Related Stories

Related Stories