சினிமா

5in1_Cinema | பிறந்த நாளன்று ராஷ்மிகாவுக்கு கிடைத்த முக்கிய பரிசு.. குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!

5in1_Cinema | பிறந்த நாளன்று ராஷ்மிகாவுக்கு கிடைத்த முக்கிய பரிசு.. குதூகலத்தில் விஜய் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா, வெளியானது அறிவிப்பு!

கன்னடத்தில் வெளியான `க்ரிக் பார்டி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

விஜயின் 66வது படத்தின் நாயகி ராஷிமிகாதான் என சில நாட்களாக தகவல்கள் உலவி வந்தது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக, ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு சேர்த்து, விஜயின் 66வது படத்தில் ராஷ்மிகாதான் நாயகி எனவும் அறிவித்துள்ளது படக்குழு. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்.

ஜீ5யில் வெற்றிமாறனின் வெப் சீரிஸ்!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று ஜீ5. தொடர்ச்சியாக திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை வெளியிடு வரும் இந்த தளம் தற்போது புதிதாக தான் வெளியிட உள்ள படங்கள் மற்றும் சீரிஸ்களை அறிவித்துள்ளது. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடித்து உருவாகியுள்ள `நிலமெல்லாம் ரத்தம்' என்ற சீரிஸ் வெளியாக உள்ளது.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் இயக்கியுள்ள `பேப்பர் ராக்கெட்' திரைப்படமும் வெளியாக உள்ளது. இதோடு சேர்த்து இன்னும் பல சீரிஸ்கள், படங்கள் வெளியாக உள்ளன.

சமந்தாவின் `யஷோதா' ஆகஸ்ட் 12ல் ரிலீஸ்!

சமந்தாவின் நடிப்பில் மிகப்பிரம்மாண்டாமாக உருவாகிவரும் படம் `யஷோதா'. தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஹரீஷ் ஷங்கர் - ஹரீஷ் நாராயணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.

வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்த் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் யானை மற்றும் தமிழரசன்!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் நடித்து உருவாகியுள்ள படம் `யானை'. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மே 6ம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் ஸீ5யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள `தமிழரசன்' படமும் ஸீ5 தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் நடிக்கும் `கட்டா குஸ்தி'

விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸுக்கு `மோகன் தாஸ்' திரைப்படம் தயாராக உள்ளது. இதற்கடுத்து அவர் நடிக்கும் படத்தை செல்லா அய்யாவு இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு விஷ்ணு விஷால் நடிப்பில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தை இயக்கியவர். தற்போது மீண்டும் இவர்கள் இணையும் படத்திற்கு `கட்டா குஸ்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தை விஷ்ணு விஷாலுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories