சினிமா

5in1cinema|பவர்.. டெரர்.. ஃபயர்.. தெலுங்கில் அரபிக் குத்து, இந்தியில் டிரெய்லர் : தொடரும் பீஸ்ட் ஃபீவர்!

5in1cinema|பவர்.. டெரர்.. ஃபயர்.. தெலுங்கில் அரபிக் குத்து, இந்தியில் டிரெய்லர் : தொடரும் பீஸ்ட் ஃபீவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கில் அரபிக் குத்து, இந்தியில் டிரெய்லர்... தொடரும் பீஸ்ட் ஃபீவர்!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படம் `பீஸ்ட்'. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் முதல் நாளிலேயே 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. இந்தப் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அரபிக் குத்து பாடலின் தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனை இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். இதனை பாலிவுட் நடிகர் வருண் தவான் வெளியிட்டுள்ளார்.

விஷாலின் `லத்தி' படத்திற்கு இசையமைக்கும் யுவன்!

`வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் `லத்தி'. இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். அறிமுக வினோத்குமார் இயக்கும் இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து `ராணா' என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள்.

தற்போது இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியான போது சாம் சி.எஸ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவின் `கேப்டன்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

`நாணயம்', `நாய்கள் ஜாக்கிரதை', `மிருதன்', `டிக் டிக் டிக்' போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர் ராஜன். இவர் ஆர்யாவை வைத்து இயக்கிய `டெடி' படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியானது.

தற்போது மீண்டும் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் `கேப்டன்'. இந்தப் படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, சிம்ரன் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

`டாணாக்காரன்' படத்தின் துடித்தெழு தோழா பாடல் வெளியீடு!

அசுரன், ஜெய்பீம் படங்களில் நடிகராஜ கவனம் ஈர்த்தவர் தமிழரசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் `டாணாக்காரன்'. விக்ரம் பிரபு, லால், அஞ்சலி நாயர் எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 8ம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து `கட்டிக்கோடா' என்ற பாடல் வெளியானது. தற்போது படத்திலிருந்து `துடித்தெழு தோழா' என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

நான்கு மொழிகளில் உருவாகிறது வரலக்ஷ்மியின் `சபரி'

5in1cinema|பவர்.. டெரர்.. ஃபயர்.. தெலுங்கில் அரபிக் குத்து, இந்தியில் டிரெய்லர் : தொடரும் பீஸ்ட் ஃபீவர்!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது `சபரி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அனில் குமார் இயக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராக உள்ளது இந்தப் படம். இதன் பூஜை இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. விரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

banner

Related Stories

Related Stories