சினிமா

குட்டி ரசிகைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த நடிகர் மம்முட்டி... மருத்துவமனையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

நினைவுக்குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி.

குட்டி ரசிகைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த நடிகர் மம்முட்டி... மருத்துவமனையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நினைவுக்குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி.

பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படும் நினைவுக்குறைவு நோய் அரிதாக சிறுவர்களையும் பாதிக்கும். நினைவுக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆராதிகா என்ற சிறுமி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமி ஆராதனா மலையாள நடிகர் மம்முட்டியின் ரசிகை. தனக்கு நினைவு மறப்பதற்குள் மம்முட்டியை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார். தனக்கு இன்று பிறந்தநாள் என்ற நிலையில் தனக்குப் பிடித்த நடிகரான மம்முட்டி வந்து பார்ப்பாரா எனக் கேட்டிருந்தார்.

சிறுமியின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதை அடுத்து மம்முட்டியும் அந்த வீடியோவை பார்த்துள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற மம்முட்டி, சிறுமியின் ஆசைப்படி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளம் ரசிகையின் விருப்பத்திற்கிணங்க மம்முட்டி உடனடியாகச் சென்று சந்தித்தது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories