இந்தியா

ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!

ஆங்கில வழிக் கல்வி இந்தியர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் கற்பித்தல் மொழி தொடர்பான கொள்கை, நாடு முழுவதும் சீரற்று உள்ளது என தெரிவித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம் வெளியாகியுள்ளது.

ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் காரணமாக எழுந்துள்ள விவாதத்தில் பயிற்று மொழியும் ஒன்று என ‘தி இந்து’ தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான பதிவு பின்வருமாறு,

“தாய்மொழிக் கல்வி, குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதை கல்வியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை கல்வியியல் ஆராய்ச்சி உறுதி செய்துள்ளது. பயிற்று மொழியை தேர்வு செய்வது அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமை - இதனை மறுக்கும் உரிமை ஒன்றிய அரசுக்கு இல்லை.

ஒன்றிய அரசு தீவிரமாக முன்னெடுக்கும் தேசிய கல்விக் கொள்கை, ஆங்கில எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது மக்களின் விருப்பங்களுக்கு எதிரானது.

ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!

தங்களின் பிராந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க விரும்பும் மாநிலங்கள், ஆங்கிலக் கல்வியையும், ஆங்கிலத்தை ஒரு பயிற்று மொழியாகவும் ஊக்குவிக்க விரும்புகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் அரசு உதவி பெறும் ஆங்கில வழிப் பள்ளிகள் உள்ளன. ஆங்கில வழிக் கல்விக்கான தேவை இந்தி பேசும் மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது.

பெரும்பாலும் தரமற்ற மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் இதன் மூலம் பயன்பெறுகிறது. உலகளாவிய சேவைத் துறைகளில் தனிநபர்களும் நாடுகளும் தங்களுக்கான இடத்தை பெறுவதில் ஆங்கிலத் திறன் உதவுகின்றன. இந்தியாவில், பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை பெறுவதற்கான கருவியாக ஆங்கிலக் கல்வி உள்ளது.

ஒருவேளை அரசுப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியை வழங்கவில்லை என்ற நிலையில், வசதி படைத்த குடும்பங்கள் தனியார் பள்ளிகள் மூலம் அதனை பெறும் நிலை உள்ளது. இதன் காரணமாக கல்வி என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்குகின்றன. இது சமூக நலன்களுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது.

ஆங்கில அறிவு, அதிகாரம் அளிப்பதற்கும், முன்னேற்றத்திற்கான விளைவுகளை ஏற்படுத்தும். ஆரம்பக் கல்வி நிலையில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க வேண்டுமா என்பது குறித்து விவாதம் தேவை. மிகவும் பின்தங்கிய பிரிவு மக்கள், அவர்களின் லட்சியங்களையும், முன்னேற்றத்தையும் அடைவதற்கு உதவும் வகையில் அரசுகளின் கொள்கைகள் இருக்க வேண்டும்.”

banner

Related Stories

Related Stories