தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.

மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கும், தே.மு.தி.க.வுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 இடங்களில் தி.மு.க வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரை கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று, காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரை அவர்களின் கட்சி தலைமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னைத் தலைமைச் செயலகத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

அதேபோல், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மேனுத்தாக்கல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories