சினிமா

விஜய்யை இயக்குகிறாரா பிரேமம் இயக்குநர்? , தனுஷை போல இந்தியில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமா குறித்த டாப் 5 செய்திகளும், படங்கள் குறித்த அப்டேட்களும்.

விஜய்யை இயக்குகிறாரா பிரேமம் இயக்குநர்? , தனுஷை போல இந்தியில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. "விஜயை இயக்க காத்திருக்கிறேன்" - இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்

நேரம், ப்ரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது ப்ரிவிராஜ் நடிப்பில் `கோல்டு' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் விஜயின் பீஸ்ட் பட, ஜாலியோ ஜிம்கான பாடலை முகநூலில் பகிர்ந்திருந்தார் அல்போன்ஸ். அதில் ரசிகர் ஒருவர் "நீங்கள் விஜய் நடிப்பில் ஒரு காதல் படம் இயக்குங்கள்.

விஜய்யை இயக்குகிறாரா பிரேமம் இயக்குநர்? , தனுஷை போல இந்தியில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

ரசிகர்கள் கொண்டாடுவார்கள், படமும் வெற்றியடையும்" எனக் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் "ப்ரேமம் ரிலீஸ் ஆன பிறகு தமிழ்நாட்டில் இருந்து வந்த முதல் அழைப்பே விஜய்யிடமிருந்துதான். நேரிலும் ஒருமுறை சந்தித்தேன். விரைவில் படம் இயக்க அழைப்பார் எனக் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்

2. வெளியாகிறது வெங்கட்பிரபுவின் `மன்மத லீலை' பட டிரெய்லர்!

`மாநாடு' படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் `மன்மத லீலை'. அஷோக் செல்வன், சம்யுக்தா, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ப்ரேம் ஜி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாக உள்ளது. படம் ஏப்ரல் 1ம் தேதி திரைக்கு வருகிறது.

3. சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் உக்ரைன் நடிகை மரியா!

தமிழ் சினிமாவில் பரபரப்பாக நடித்து வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில், டான், அயலான் போன்ற படங்கள் ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது. இதில் `டான்' மே 13ல் திரைக்கு வர இருக்கிறது. தற்போது தெலுங்குப் பட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா நடிக்க இருக்கிறார் என அறிவித்துள்ளது படக்குழு. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

4. விஜய் சேதுபதியின் `மாமனிதன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சீனு ராமசாமி இயக்கிய `தென்மேற்குப் பருவக்காற்று' படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் `இடம் பொருள் ஏவல்', `தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு நான்காவது முறையாக `மாமனிதன்' படத்திற்காக இணைந்தது சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி.

விஜய்யை இயக்குகிறாரா பிரேமம் இயக்குநர்? , தனுஷை போல இந்தியில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

அனைத்து வேலைகளும் முடிந்தும், திரைக்கு வராமல் இருந்தது `மாமனிதன்'. தற்போது மே 6ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

5. பாலிவுட்டில் படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

தமிழில் 3, வை ராஜா வை படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் இயக்கிய `பயணி' என்ற ம்யூசிக் வீடியோவும் வெளியானது. தற்போது இவர் இயக்கும் அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் ஐஸ்வர்யா. காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு `ஓ சாத்தி சல்' (Oh Saathi Chal) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories