சினிமா

“பிடிச்ச நடிகரோட படம் சரியா போகல” : விரக்தியில் விபரீத முடிவெடுத்த ரசிகர் - திரையுலகில் அதிர்ச்சி!

படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் ரசிகர் ஒருவர் தற்கொலை கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>Representational image</p></div>
<div class="paragraphs"><p>Representational image</p></div>
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், ஆந்திரா, தெலங்கானா தவிர பிற மொழிகளி்ல் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைப் பெறவில்லை.

‘ராதே ஷியாம்’ படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில் பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் முத்யாலா ரவி தேஜா (24). வெல்டிங் தொழிலாளியான இவர் பிரபாசின் தீவிர ரசிகர் எனக் கூறப்படுகிறது. ராதே ஷியாம் படம் பார்த்த இவருக்கு படம் பிடிக்கவில்லை, படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கிறது.

“பிடிச்ச நடிகரோட படம் சரியா போகல” : விரக்தியில் விபரீத முடிவெடுத்த ரசிகர் - திரையுலகில் அதிர்ச்சி!

இதுகுறித்து தனது தாயிடமும், நண்பரிடமும் புலம்பிய அவர் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

‘ராதே ஷியாம்’ திரைப்படத்தால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories