விளையாட்டு

FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக பங்கேற்ற கேப் வெர்டே அணி, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கே ஆட்டம் காட்டியது அனைவரின் புருவத்தையும் உயரவைத்துள்ளது.

FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போது சூப்பர் 16 போட்டிக்குள் நுழைய பல்வேறு அணிகள் திவீரமாக முயற்சி செய்தும் வருகின்றன. அதில் சில அணிகள் சூப்பர் 16 சுற்றுக்குள் நுழைந்தும் விட்டன.

இருப்பினும் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகள் கூட, முதல்முறை விளையாடும் அணியிடம் மிகவும் கடினமாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையே உள்ளது. அதுதான் கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின் சிறப்பம்சமே.

குறிப்பாக முதல் முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்ற கேப் வெர்டே அணி, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிராக கடும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுடன் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்தது கேப் வெர்டே அணி.

FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!

போட்டி முடிந்த பிறகு பேசிய கேப் வெர்டே தலைமைப் பயிற்சியாளர் புபிஸ்டா, ”தோல்வி ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், எங்களது வீரர்கள் வெளிப்படுத்திய தைரியமும் போராட்ட குணமும் பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

"தொடரிலிருந்து வெளியேறுவதால் நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. வெற்றிக்கு மிக அருகில் சென்றோம். வீரர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி அழுதனர். இதுவும் வளர்ச்சியின் ஒரு பகுதிதான். இந்த அனுபவம் எங்களை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறினார்.

உலகத் தரவரிசையில் 67-வது இடத்தில் உள்ள கேப் வெர்டே, உலகக் கோப்பை அறிமுக அணியாக இருந்தபோதிலும், குரூப் சுற்றில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின் மற்றும் உருகுவே அணிகளை சமநிலைக்கு தள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பின்னர் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 120 நிமிடங்கள் வரை போராட வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது இந்த அணி வெளியேறினாலும் வரும் தொடர்களில் சிறப்பாக செயல்படும் என கால்பந்து ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories