சினிமா

யாரென்று தெரிகிறதா?.. 20 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தை கலாய்த்த பிரேமம் பட இயக்குநர்; வைரலாகும் போட்டோ!

பிரேமம் பட இயக்குநர் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாரென்று தெரிகிறதா?.. 20 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தை கலாய்த்த பிரேமம் பட இயக்குநர்; வைரலாகும் போட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேரம் படத்தின் மூலம் சினிமா உலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, தம்பி ராமையா என பல நட்சத்திரங்கள் நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் படமாக 2013ல் தமிழ், மலையாளத்தில் படமாக்கப்பட்டு வெளியானது.

அடுத்த 2 ஆண்டுகள் கழித்து ப்ரேமம் என்ற நேரடி மலையாள படத்தை இயக்கி பிரமாண்ட வெற்றியை கண்டார் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லால் உடனான படத்தை இயக்கி வருகிறார்.

அதற்கு பிறகு ப்ரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்ட் என தலைப்பிடப்பட்டுள்ள படத்தையும் மலையாளத்தில் அல்போன்ஸ் இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் அல்போன்ஸ் நடித்திருக்கிறார்.

அதன்படி பிரேமம் படத்தில் ரோனி வர்கீஸ் என்ற கதாபாத்திரத்திலும், தமிழில் வெளியான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் தில்லி என்ற பெயரிலும் நடித்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் முன்பாக 2001ம் ஆண்டு வெளியான அஜித்தின் தீனா படத்திலும் அல்போன்ஸ் புத்திரன் நடித்திருக்கிறார்.

அது தொடர்பான புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது. தீனா படத்தில் ப்ளாஸா கார்னலில் இருக்கும் லைலாவை சில இளைஞர்கள் கிண்டல் செய்யும் காட்சி வரும். அப்போது அஜித் அவர்களை அடித்து துவம்சம் செய்வார். அந்த கும்பலில் ஒருவராக அல்போன்ஸ் புத்திரன் நடித்திருப்பார்.

சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாமல், தமிழில் பல்வேறு குறும்படங்களையும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories