தமிழ்நாடு

திருவள்ளுவருக்குக் காவி உடை: முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி!

திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த புகைப்படத்தை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

திருவள்ளுவருக்குக் காவி உடை: முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.கவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.கவுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்தது போதாமல், தற்போது பா.ஜ.கவின் அடிமையாகவே மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

"என்னடா இவர் இப்படி முரட்டு அடிமையாகச் சேவகம் செய்து வருகிறார்?" என அ.தி.மு.க கட்சித் தொண்டர்களே முணுமுணுத்து வருகிறார்கள். பேரறிஞர் அண்ணாவைப் பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்தபோது கூட, எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை.

தற்போது, தான் அ.தி.மு.க கட்சிக்காரன் அல்ல, பா.ஜ.கவின் ‘முரட்டு சங்கி’ என்பதை மீண்டும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இன்று சர்வதேசத் தாய்மொழி தினம். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, தங்களின் தாய்மொழிக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த படத்தைப் பகிர்ந்து தனது விசுவாசத்தைப் பா.ஜ.கவிற்கு காட்டியுள்ளார்.

இந்நிலையில், ”பா.ஜ.க மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்" என்று கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories