
தமிழ் திரையுலகில் இன்றியமையாத நடிகர்களில் ரஜினி-கமல் இருந்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். - சிவாஜியை overtake செய்தது ரஜினி-கமல் தான். இன்று விஜய் - அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வது போலவே, 80-90களில் ரஜினி-கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டனர். எனினும் இருவருக்கும் ரசிகர்கள் அதிகரிப்பதற்கு முன்பே அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே உள்ளிட்ட ஒரு சில படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர்.

அதன்பிறகு இருவருக்கும் அதிகளவு ரசிகர்கள் வரவே, இருவரின் திரைப்படங்களும் ஒன்றாக திரையரங்குகளில் மோதிக்கொண்டன. இதனால் இருவரின் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழலில், இவர்கள் இருவரும் நண்பர்களாகவே இன்றளவும் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் இருவரும் இணைந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று பலரும் ஏங்கிய நிலையில், தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக திரைப்படத்தில் நடிக்கவுள்ளளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தற்போது அதற்கான Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினி-கமல் ஆகியோர் பிறந்த தேதிகளான 12 & 07 என்று சரியாக 12.07 மணிக்கு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இந்த கிளிம்ஸ் வீடியோவில், ரஜினி-கமல் இருவரும் ஒன்றாக நடந்து வந்து ஒரு காரில் ஏறுவது போன்றும், அதன் பிறகு காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் நெல்சனிடம் 'யார் ஹீரோ?" என்று கேட்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் வெளியான நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ Youtube பக்கத்திலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்குகிறார்; அனிருத் இசையமைக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க முடிகிறது.






