சினிமா

“அற்புதம் அம்மாளாக நடிக்கப்போவது யார்?” : இயக்குநர் வெற்றிமாறன் சொன்னது என்ன?

அற்புதம் அம்மாளாக நடிக்கவிருப்பவரை முடிவு செய்துவிட்டதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

“அற்புதம் அம்மாளாக நடிக்கப்போவது யார்?” : இயக்குநர் வெற்றிமாறன் சொன்னது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுவிக்க அவரது தாயார் அற்புதம்மாள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்றை உருவாக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வின்போது தெரிவித்திருந்தார்.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து, தேசிய விருதுகளையும் பெற்று வரும் இயக்குனர் வெற்றிமாறன் அற்புதம் அம்மாளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவிருக்கும் கவனம் பெற்றது.

‘விடுதலை’, ‘வாடிவாசல்’ என தொடர்ந்து படங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், அற்புதம் அம்மாளாக நடிக்கவிருப்பவரை முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அற்புதம் அம்மாள் பயோபிக் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், “பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக்கும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது.

32 ஆண்டுகளாக நடக்கும் அற்புதம்மாளின் போராட்டத்தைக் காட்சிப்படுத்துவது ரொம்பவே சவாலானது. அற்புதம் அம்மாளாக நடிக்கவிருப்பவரை முடிவு செய்துவிட்டேன். விரைவில் அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சூரி நடிக்கும், விடுதலை, சூர்யா நடிக்கும் வாடிவாசல் ஆகிய திரைப்படங்களை முடித்த பிறகு அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை வெற்றிமாறன் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories