சினிமா

‘வாடிவாசல்’ படத்திற்காக மாஸ்டர் ப்ளான் போடும் வெற்றிமாறன்... அது என்ன தெரியுமா?

வாடிவாசலுக்காக, ‘விடுதலை’ படத்தை குறுகிய காலத்தில் முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

‘வாடிவாசல்’ படத்திற்காக மாஸ்டர் ப்ளான் போடும் வெற்றிமாறன்... அது என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா, இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணியமைக்க இருக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ‘வாடிவாசல்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சூரியின் ‘விடுதலை’ படத்தில் கவனம் செலுத்திவரும் இவர் சூர்யாவின் படத்தை துவங்குவதற்காக குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு வெற்றி மாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதில் சூர்யாவிற்கு இரட்டை வேடம் எனவும் பரவலாகச் சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories