சினிமா

“இது வலிமை அப்டேட் இல்ல” : புதிய சாதனை படைத்த ‘விஸ்வாசம்’ - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! #CineUpdates

‘அடிச்சு தூக்கு’ பாடல் யூட்யூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

“இது வலிமை அப்டேட் இல்ல” : புதிய சாதனை படைத்த ‘விஸ்வாசம்’ - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! #CineUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஓடிடியில் வெளியாகிறதா `ராஷ்மி ராக்கெட்'?

டாப்ஸி நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாரிக்கும் படம் ‘ராஷ்மி ராக்கெட்’. நீண்ட நாடகளாகவே ரிலீஸுக்கு காத்திருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளம் 58 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படம் இயக்குனர் நந்தா பெரியசாமியின் எழுத்தில் பாலிவுட் இயக்குனர் அகர்ஷ் கருணா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இது தவிர டாப்ஸிக்கு தமிழ் மற்றும் ஹிந்தியில் சில முக்கிய படங்கள் உருவாகிவருகிறது. அவற்றில் ‘ரன் லோலா ரன்’ படத்தின் இந்தி ரீமேக் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோ பிக் ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.

“இது வலிமை அப்டேட் இல்ல” : புதிய சாதனை படைத்த ‘விஸ்வாசம்’ - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! #CineUpdates

100 மில்லியன் சாதனை படைத்த விஸ்வாசம் பாடல்!

சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் தொடர்ச்சியாக நான்கு படங்கள் வெளியாகிருந்தது. அவற்றில் ஒன்று தான் ‘விஸ்வாசம்’. அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் இமான் இசையில் அமைந்திருந்த பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

குறிப்பாக அடிச்சு தூக்கு, கண்ணான கண்ணே ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்கள் எங்கும் ட்ரெண்டானது. இந்த நிலையில் அடிச்சு தூக்கு பாடல் யூட்யூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories