அரசியல்

முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகை.. ஆட்சி நடத்த Astrologer எதற்கு CM Bro? : திமுக எம்.எல்.ஏ முத்துராஜா!

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை, ஸ்டிக்கர் ஒட்டி முதலமைச்சர் விஜய் இன்று (நவ.02) திறந்து வைத்த நிலையில், திமுக எம்.எல்.ஏ வை.முத்துராக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகை.. ஆட்சி நடத்த Astrologer எதற்கு CM Bro?  : திமுக எம்.எல்.ஏ முத்துராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

புதுக்கோட்டையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் வழக்கம்போல் இன்று (நவ.02) தவெக ஸ்டிக்கர் ஒட்டி திறக்க உள்ளார்.

இது திராவிட மாடல் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலை நோக்குப் பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்ட பேருந்து நிலையம் என்பதால், இதனைக் கொண்டாடும் விதமாக திமுக-வினர் நேற்று (நவ.01) பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி உள்ளனர்.

அப்போது அங்கு வந்த தவகெ அரசின் காவல்துறையினர், மக்களுக்கு இனிப்புகளை வழங்கக்கூடாது என இனிப்பு தட்டுகளை பிடுங்கிச் சென்றதால் பொதுமக்கள் மற்றும் திமுக-வினர் கடும் அதிருப்தி அடைந்தனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் இப்படி பொதுமக்களுகு வழங்கும் ஸ்வீட்டை பிடிங்கிச் செல்வதுதான் இவர்களின் வேலையா? என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் விஜய், இரும்புத் தடுப்புகள் அமைக்கபட்ட சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வேளையில், அவரை பார்ப்பதற்காக காத்திருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலமைச்சர் விஜய் வருவதால், பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைக்கப்பட்டு இருந்த பேரிகார்ட் பகுதிக்குள் மாணவி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகை.. ஆட்சி நடத்த Astrologer எதற்கு CM Bro?  : திமுக எம்.எல்.ஏ முத்துராஜா!

ஒரு மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகிறார் என்றால் பாதுகாப்போடு வருவது வழக்கமான நடைமுறைதான். ஆனால், மக்களையே அருகில் விடாமல் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புத் தடுப்புகள் அமைத்து அந்த வழியில் முதலமைச்சர் செல்வது எந்த அளவுக்கு சரியான அணுகுமுறை என பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் உள்ளது.

முதலமைச்சர் விஜயின் புதுக்கோட்டை வருகை, அதனைச் சுற்றிய சர்ச்சைகள் குறித்து புதுக்கோட்டை எம்.எல்.ஏ வை.முத்துராஜா, ஜோசியர் சொன்னதால் புதுக்கோட்டை அரசு நலத்திட்ட நிகழ்ச்சி ரத்தா?

புதுக்கோட்டையில் அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக ஆயுதப்படை மைதானத்தில் மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சியை இந்த ஆட்சியாளர்கள் ரத்து செய்து இருக்கிறார்கள்.

ஆயுதப்படை மைதானத்திற்குப் பதிலாக ஆட்சியர் அலுவலகத்திலேயே சிறிய அளவில் நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

ஏன் இந்த மாற்றம்? மக்கள் பணத்தைக் கொட்டி செலவழித்து ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஜோசியர் சொன்னார் என்ற சென்டிமென்ட் காரணமாக கடைசி நேரத்தில் அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதா?

நிகழ்ச்சி மட்டுமில்லை, முதலமைச்சர் வருகிறார் என்பதற்காக இன்றைக்கு நடைபெறவிருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வைக் கூட அரசு தரப்பில் ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

படி படி என்றது திராவிட மாடல். வந்து கொடி பிடி என்கிறதா இந்த Reels Model?

உலக சிக்கன நாள் அன்று சிக்கனத்தின் அவசியம் பற்றி ஊருக்கு உபதேசம் செய்தார் CM சார். ஆனால், இன்றைக்கு அவர் வரும் வழியெங்கும் சுமார் 40 கிமீ தூரத்துக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வீணாக செலவு செய்து தடுப்புகளை வைத்துள்ளார்கள்.

இப்படி ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்வது நியாயமா? ஆட்சி நடத்த Astrologer எதற்கு CM Bro? என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories