அரசியல்

போராடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நீக்க மிரட்டல்?.. தமிழ்நாடு முழுவதும் விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்!

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தவெக அரசின் செயலால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போராடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நீக்க மிரட்டல்?.. தமிழ்நாடு முழுவதும் விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பி வாங்கும் நடைமுறையை அரசு கைவிடக் கோரி போராட்டம் நடத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று (நவ.01) மூடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் வழக்கமாக மதியம் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால், இன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆகியும் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை திரும்பக்கொடுத்து ரூ.10 வாங்கிக் கொள்ளும் நடைமுறையில் உள்ள நிலையில், பாட்டிலுக்கு அசல் விலையில் ரூ.10 கூடுதல் தொகையாக அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், காலி மதுபாட்டில்களை திரும்பக் கொடுத்து ரூ.10 வாங்கிக் கொள்ளும் திட்டமும் நடைமுறையிலேயே உள்ளதாக தவெக அரசு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில், அதற்கான கால அவகாசமும் இல்லாத போதும் காலி பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என்ற அரசாணையை கைவிட வேண்டும். காலி பாட்டில்களை இப்போது திரும்பப் பெற முடியாது என்ற அடிப்படையில் கடைகளை திறக்காமல் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அத்துடன் தவெக அரசின் இந்த போக்கை கண்டித்து சென்னை, மதுரை, கரூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

போராடிய டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நீக்க மிரட்டல்?.. தமிழ்நாடு முழுவதும் விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்!

சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாமல் இருந்ததால் கூட்டம் கூடியது. இன்று (நவ.01) ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் மதுபானங்களை வாங்க ஒவ்வொரு கடைகள் முன்பும் மதுபிரியர்கள் திரண்டு காத்திருந்திருந்தனர்.

இந்நிலையில், காலி பாட்டில் திட்டத்தை செயல்படுத்த மறுத்து வேண்டுமென்றே கடையை மூடியதால் அரசுக்கு ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மறுத்து, தமிழ்நாடு முழுவதும் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது தவெக அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது.

குறிப்பாக இன்று (நவ. 1) ஒரே நாளில் முன் அனுமதியின்றி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, தன்னிச்சையாக கடைகளை மூடிய அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் “ஏன் உங்களை பணியில் இருந்து விடுவிக்கக் கூடாது?” என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கடைகளுக்கு இதே போன்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் பறந்துள்ளது. விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் அடுத்த கட்டமாக பணி நீக்க உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் பாயும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் ஊழியர்களை அழைத்துப் பேசாமல் நேரடியாக பணி நீக்க நடவடிக்கைக்குள் தவெக அரசு இறங்கியுள்ளது, டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடல் பாடி ஓட்டுக் கேட்ட தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் ஆட்சிக்கு வந்ததும் இன்று பாட்டிலுக்கு 10 ரூபாயை விலையை ஏற்றியதோடு மட்டுமில்லாமல், டாஸ்மாக் ஊழியர்களுடனும் தவெக அரசு மோதல் போக்கை கடைபிடித்து வரும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories