தமிழ்நாடு

“தனிநபர்களின் Ego-வுக்கு காவு கொடுக்கப்படும் தமிழ்நாடு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

“தனிநபர்களின் Ego-வுக்கு காவு கொடுக்கப்படும் தமிழ்நாடு” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய நிதி அமைச்சகம், 2026 அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி விகிதம் 3% ஆகப் பதிவாகி, தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

தேசிய அளவில் ஒட்டுமொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி விகிதம் 15.8%-ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.11,661 கோடியாக மட்டுமே உள்ளது. தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டை காட்டிலும், மகாராஷ்டிரா (13%), கர்நாடகா (18%), குஜராத் (16%), மற்றும் உத்தரப் பிரதேசம் (24%) என ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.

அதேபோல், ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் தென் கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இந்த மூன்று நிறுவனங்களும் ஆந்திராவிற்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனங்களின் முதலீடு ரூ.1,614 கோடியாகும்.

இந்த இரண்டு சம்பவங்களை, குறிப்பிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் த.வெ.க அரசை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் வெயிட்டுள்ள சமூகவலைதளப் பக்கத்தில்,

காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:

1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த Guidance TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் Ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து Show காட்டக் கிளம்பிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories