தமிழ்நாடு

தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் GST வரி வருவாய் : முக்கிய ஆலோசனை வழங்கிய தங்கம் தென்னரசு!

நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.

தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் GST வரி வருவாய் : முக்கிய ஆலோசனை வழங்கிய தங்கம் தென்னரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய நிதி அமைச்சகம், 2026 அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி விகிதம் 3% ஆகப் பதிவாகி, தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

தேசிய அளவில் ஒட்டுமொத்த உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி விகிதம் 15.8%-ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.11,661 கோடியாக மட்டுமே உள்ளது. தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டை காட்டிலும், மகாராஷ்டிரா (13%), கர்நாடகா (18%), குஜராத் (16%), மற்றும் உத்தரப் பிரதேசம் (24%) என ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,த.வெ.க அரசுக்கு சில ஆசோசனைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்” என தெரித்துளார்.

banner

Related Stories

Related Stories