சினிமா

'பில்லா 3' உருவாகிறதா?- விஷ்ணுவர்த்தன் பதில்; 'அயலான்' இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா - சினிமா துளிகள்!

‘பில்லா 3’ எடுப்பது குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பதிலளித்துள்ளார்.

'பில்லா 3' உருவாகிறதா?- விஷ்ணுவர்த்தன் பதில்; 'அயலான்' இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா - சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரவிக்குமாருடன் இணையும் சூர்யா!

சூரரைப் போற்று ஹிட்டை தொடர்ந்து நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கவணம் செலுத்தி வருகிறார். இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் இணையவுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ்ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்க சூர்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட வேலைகளை கவனித்து வருகிறார். அந்த பட வேலைகளை முடித்த பிறகு சூர்யா படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பில்லா 3' உருவாகிறதா?- விஷ்ணுவர்த்தன் பதில்; 'அயலான்' இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா - சினிமா துளிகள்!

‘பில்லா 3’ குறித்து மனம் திறந்த விஷ்ணுவர்த்தன்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான பில்லா, ஆரம்பம் ஆகிய படங்கள் சூப்பர்ஹிட் படங்களாக அமைந்திருந்தன. அதனைத் தொடர்ந்து இவர்களின் காம்போ மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர், ஆனால் சூழ்நிலைகள் காரணமாக இவர்கள் இணைய இருந்த ‘பில்லா 2’ படம் கைமாறியதால் அதற்குப் பின் இவர்கள் இணையும் வாய்ப்பு அமையவே இல்லை. அண்மையில் ‘ஷேர்ஷா’ படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் இருந்த இவரிடம் அஜித்தின் ‘பில்லா 3’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "இதுவரை எந்த திட்டமும் இல்லை, பில்லா முதல் பாகம் கூட எவ்வித திட்டமும் முன் இல்லாமலே தொடங்கியது. சில படங்களை மீண்டும் எடுக்காமல் இருப்பதே அதன் தனித்தன்மையை தக்கவைக்கும். பில்லா படமும் அப்படியே இருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

'பில்லா 3' உருவாகிறதா?- விஷ்ணுவர்த்தன் பதில்; 'அயலான்' இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா - சினிமா துளிகள்!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் புதுப்பாடல்!

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி இணைந்து நடித்திருக்கும் படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானது. இதில் ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஷ்காந்த், மயில்சாமி, பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். லிப்ரா ப்ரொடக்‌ஷன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ‘ஏதோ சொல்ல’ மற்றும் ‘டாக்கு லெஸ்சு ஒர்க்கு மோரு’ ஆகிய பாடல்கள் வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது ‘வைல்ட் ஸ்ட்ராபரி’ எனும் பாடல் வெளியாக உள்ளது. நாளை இந்தப் பாடலின் வீடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories