சினிமா

'ஆந்தாலஜி' பக்கம் செல்லும் சூப்பர் டீலக்ஸ் இயக்குனர்... 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக் தொடக்கம்!

‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படபிடிப்பு துவங்கியது.

'ஆந்தாலஜி' பக்கம் செல்லும் சூப்பர் டீலக்ஸ் இயக்குனர்... 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக் தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக் ஷூட்டிங் துவங்கியது!

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கி மோகன்லால் லீட் ரோலில் நடித்து வெளியான படம் ‘லூசிஃபர்’. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கிய சிரஞ்சீவி அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பினை இயக்குனர் மோகன் ராஜாவிடம் ஒப்படைத்தார். இந்தக் கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார்போல் சில மாற்றங்களை செய்த மோகன் ராஜா தற்போது ஷூட்டிங்கை துவங்கியுள்ளார்.

படத்திற்கு இசையமைப்பாளராக தமனை ஒப்பந்தம் செய்தவர் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவையும் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வாவையும் ஒப்பந்தம் செய்துள்ளார். ‘சிரஞ்சீவி 153’ படமான இது மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளதால் பல முன்னணி நடிகர்கள் இதில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆந்தாலஜி' பக்கம் செல்லும் சூப்பர் டீலக்ஸ் இயக்குனர்... 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக் தொடக்கம்!

தியாகராஜன் குமாரராஜா தலைமையில் புதிதாக ஒரு ஆந்தாலஜி படம்!

2010ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. கோலிவுட் ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவமாக அமைந்த இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா அடுத்த எடுத்த படம் தான் ‘சூப்பர் டீலக்ஸ்’. தனது திரைக்கதைகளில் புது யுக்தியை கையாளும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அடுத்து ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை இவரோடு சேர்ந்து பாலாஜி சக்திவேலும் இயக்குனர் பாலாஜி தரணிதரனும் இணைந்து இயக்கவுள்ளனர். இந்தக் கதை வடசென்னையை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories