சினிமா

ஜிம் வொர்க்அவுட் புகைப்படங்களை வெளியிட்ட 68 வயது மம்மூட்டி - ரசிகர்கள் உற்சாகம்!

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மம்மூட்டி இரண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஜிம் வொர்க்அவுட் புகைப்படங்களை வெளியிட்ட 68 வயது மம்மூட்டி - ரசிகர்கள் உற்சாகம்!
PC
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகளும் அவர் பகிர்ந்த புகைப்படத்துக்கு கமென்ட் தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனாவால் அனைத்து வகையான சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள நடிகர் நடிகைகள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மம்மூட்டி இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்களில் கிரே டி-ஷர்ட் அணிந்து, கைகளில் ஜிம் கிளவுஸும் அணிந்துள்ளார் மம்மூட்டி.

வீட்டில் செய்வதற்கு வேறு வேலை இல்லை என்பதால் உடற்பயிற்சி செய்வதாக மம்மூட்டி அப்புகைப்படத்தின் கீழ் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு நடிகர்கள் நிவின் பாலி ஷரஃபுதின் உள்ளிட்டோர் கமென்ட் செய்துள்ளனர்.

அதேபோல் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ள டோவினோ தாமஸ் மற்றும் அனு சித்தாரா உள்ளிட்டோரும் கமென்ட் செய்துள்ளனர். அவருடைய ரசிகர்களும் ‘அருமை’, ‘அற்புதம்’ என கமென்ட் செய்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு டி.எஸ்.எல்.ஆர் கேமராவை பயன்படுத்தி மம்மூட்டி புகைப்படங்கள் எடுப்பது போன்ற படமும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

banner

Related Stories

Related Stories