விளையாட்டு

‘இரண்டு உலகக்கோப்பைகளை ஒன்றாக வென்றதில் மகிழ்ச்சி’ - ஓய்வு பெற்ற தோனிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து!

தோனியைப் போல் யுவராஜ் சிங்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தோனியும் யுவராஜ் சிங்கும் இணைந்திருக்கும் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

‘இரண்டு உலகக்கோப்பைகளை ஒன்றாக வென்றதில் மகிழ்ச்சி’ - ஓய்வு பெற்ற தோனிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்தவரும், கடந்த 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியவருமான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. தன்னுடைய ஓய்வு அறிவிப்பை தோனி ஒரு வீடியோவுடன் சேர்த்து வெளியிட்டார். அந்த வீடியோவில் வேறு எந்த கிரிக்கெட் வீரரையும் விட யுவராஜ் சிங்குடன் நெருக்கமாக தோனி இருக்கும் பல புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தோனிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வாழ்த்துகள் தோனி. நம் நாட்டுக்காக 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வென்றதிலும், களத்தில் நம்முடைய பல பார்ட்னர்ஷிப்களிலும் நான் மகிழ்ந்தேன். உங்களுடைய எதிர்காலத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.” என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

தோனியைப் போல் யுவராஜ் சிங்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தோனியும் யுவராஜ் சிங்கும் இணைந்திருக்கும் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தோனி யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அவர் யுவராஜ் சிங்குக்கு செல்ல வேண்டிய கேப்டன் பதவியை பறித்துவிட்டதாகவும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் முன்பு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories