சினிமா

“நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!” - 'விஜய் 65' குறித்து பார்த்திபன் சூசகம்!

‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய்யின் 65வது படத்தின் இயக்குநர் யார் என்னும் கேள்விக்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் பதில் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!” - 'விஜய் 65' குறித்து பார்த்திபன் சூசகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘பிகில்’ படம் வெளியானதும் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான தனது 64வது படத்தில் தற்போது மும்முரமாக நடித்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘மாஸ்டர்’ என தலைப்பிட்டுள்ள படக்குழு, கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், விஜய்யின் இந்தப் படமே இன்னும் முழுமையடையாத நிலையில் அவரது 65வது படம் தொடர்பான பேச்சு கோலிவுட்டில் அடிபட்டு வருகிறது. அதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். சுதா கொங்கரா, பாண்டிராஜ், கார்த்திக் தங்கவேல், மகிழ்திருமேனி என பல இளம் இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டாலும் இதுவரை அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

இதற்கிடையே, வார்த்தை ஜாலங்களில் விளையாடும் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து அவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தால் செம மாஸ் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்தது வைரலாகியுள்ளது.

இதனையடுத்து, அந்த ட்வீட்டுக்கு பதிலளித்த பார்த்திபன், “மாஸ்க்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். ('நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்.) நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை வைத்து விஜய் ரசிகர்கள் தற்போது ட்விட்டரை கலக்கி வருகின்றனர். விஜய் 65 படத்தை பார்த்திபன் இயக்குவாரா அல்லது விஜய்யுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

banner

Related Stories

Related Stories