சினிமா

விஜய் 65 அப்டேட்: இயக்குநர் தான் தெரியல.. ஆனா, ரிலீஸ் தேதி இது தான்!

விஜய்யின் 65வது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது அண்மையில் வெளியாகியுள்ள தகவல்.

விஜய் 65 அப்டேட்: இயக்குநர் தான் தெரியல.. ஆனா, ரிலீஸ் தேதி இது தான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜுடனான ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போக்கிறார்கள் என்ற கேள்வியே கோலிவுட் உலகில் அண்மைக்காலமாக எழுப்பப்பட்டு வரும் முக்கிய கேள்வியாக உள்ளது.

ஏற்கெனவே வெற்றிமாறன் விஜய்யின் 65வது படத்தை இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் அவர், சூரியுடனான படத்தை இயக்கியப் பிறகு சூர்யாவின் 40வது படத்தை இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், மகிழ் திருமேனி, அட்லி, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் தங்கவேல் என பல முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள விஜயின் 65வது படத்துக்காக இயக்குநர்கள் நீ, நான் என போட்டிப் போட்டுக்கொண்டு கதைகளை சொல்லி வருவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கி முடித்திருக்கும் சுதா கொங்கராவும் விஜயிடம் தரமான கதை ஒன்றைக் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால், பசங்க, மெரினா போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜின் பெயரும் உடன் அடிபடுவதால் யார்தான் விஜய் 65 படத்தை இயக்கவிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விஜய் 65 அப்டேட்: இயக்குநர் தான் தெரியல.. ஆனா, ரிலீஸ் தேதி இது தான்!

இந்நிலையில், இயக்குநர் உறுதியாவதற்கு முன்பே விஜய் 65 படம் எப்போது வெளியிடப்படவுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் 65 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.

ஆகையால், லோகேஷ் உடனான மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியானதும் சுடச்சுட விஜய் 65 படத்தின் பணிகளும் தொடங்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக விஜயின் போக்கிரி மற்றும் நண்பன் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகை சமயத்தில் அதிரி புதிரியான வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories