சினிமா

நடிகர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்ற IT அதிகாரிகள் - ‘மாஸ்டர்’ ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

நெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் திரைப்பட ஷூட்டிங்கின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யை அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்ற IT அதிகாரிகள் - ‘மாஸ்டர்’ ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்ற IT அதிகாரிகள் - ‘மாஸ்டர்’ ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

இன்று, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு நேரடியாகச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யிடம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்த புகாரில் சம்மன் கொடுத்ததோடு, அங்கேயே விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால், படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யை விசாரிப்பதற்காக அவரது காரிலேயே அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னதாக, 2015ம் ஆண்டு ‘புலி’ படத்தின்போது முறையாக வருமான வரி செலுத்தவில்லை என நடிகர் விஜய் மீது புகார் எழுந்தது. அதுபோல, தற்போது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories