சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ படத்தின் ‘உன்ன நெனச்சு...’ பாடலுக்கு பிரபலங்கள் பாராட்டு #ViralSong

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் சைக்கோ படத்தின் ‘உன்ன நெனச்சு’ பாடல் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ படத்தின் ‘உன்ன நெனச்சு...’ பாடலுக்கு பிரபலங்கள் பாராட்டு #ViralSong
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

வாட்ச்மேன் படத்துக்கு பிறகு டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அதிதி ராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ படத்தின் ‘உன்ன நெனச்சு...’ பாடலுக்கு பிரபலங்கள் பாராட்டு #ViralSong

மிஷ்கினின் ‘நந்தலாலா’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘சைக்கோ’ படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. மிஷ்கினுடன் முதன்முறையாக கைகோர்த்திருக்கும் உதயநிதி, இந்தப் படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘உன்ன நெனச்சு’ என்ற பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் அவர் பாடியுள்ள முதல் பாடலும் இதுதான்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ படத்தின் ‘உன்ன நெனச்சு...’ பாடலுக்கு பிரபலங்கள் பாராட்டு #ViralSong

பாடலாசிரியர் கபிலன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. பாடலை கௌதம் மேனன், யுவன் ஷங்கர் ராஜா உள்பட பலர் பாராட்டியுள்ளனர். டிசம்பர் 27-ம் தேதி ‘சைக்கோ’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து சிபிராஜ் நடிப்பில் மாயோன் என்ற படத்தை தயாரிக்கிறது.

banner

Related Stories

Related Stories