சினிமா

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அருணாச்சலமாக திரும்பிய ரஜினி: ரிலீஸானது ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்! #Darbar

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தது படக்குழு.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அருணாச்சலமாக திரும்பிய ரஜினி: ரிலீஸானது ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்! #Darbar
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினிகாந்த் முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சந்திரமுகி படத்துக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படம் ரிலீஸாக இருக்கிறது என தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது. அனிருத் இசையில் உருவாகியுள்ள படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அருணாச்சலமாக திரும்பிய ரஜினி: ரிலீஸானது ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்! #Darbar

ஏற்கெனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தின் தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடுவதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் வெளியிட்டுள்ளனர்.

தர்பார் மோஷன் போஸ்டருக்காகவும், தீம் மியூசிக்கிற்காகவும் காத்திருந்த ரஜினி ரசிகர்கள், வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெகு நாட்களுக்குப் பிறகு போலிஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பதாலும், தீம் மியூசிக் சிறப்பாக வந்திருப்பதாலும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

banner

Related Stories

Related Stories