சினிமா

ட்விட்டரை அதிரவைக்கும் ‘பிகில்’ எமோஜி - வெறித்தனமாக வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!

பிகில் எமோஜி ஹேஷ்டேக்கை ட்விட்டரில் வைரலாக்கி ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

ட்விட்டரை அதிரவைக்கும் ‘பிகில்’ எமோஜி - வெறித்தனமாக வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெறி, மெர்சல் படத்தை அடுத்து அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றவது முறையாக உருவாகியுள்ள படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.,25ம் தேதி வெளியாக இருக்கிறது.

சுமார் 180 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ட்விட்டரை அதிரவைக்கும் ‘பிகில்’ எமோஜி - வெறித்தனமாக வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!

மெர்சலை அடுத்து இந்தப் படத்துக்கும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவராலும் பார்க்கப்பட்டு சக்கப்போடு போட்டு வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே வருகிறது.

நாளை மறுநாள் படம் வெளியாகவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிகில் படத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்த நிலையில் பிகில் படத்துக்கான பிரத்யேக எமோட்டிகானை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதில், #Bigil என்ற ஹேஷ்டேக்கில் நடிகர் விஜய் கையில் ஃபுட்பாலை வைத்திருப்பது போன்ற எமோட்டிகான் இடம்பெற்றிருக்கும். இது மட்டுமல்லாமல் #வெறித்தனம் , #தளபதி63 , #BigilDiwali , #PodraVediya உள்ளிட்ட ஹேஷ்டேக்கிலும் பிகில் விஜய்யின் எமோஜி இடம்பெற்றிருக்கும்.

இதனை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மேற்குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகள் அனைத்தும் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளன.

ட்விட்டரை அதிரவைக்கும் ‘பிகில்’ எமோஜி - வெறித்தனமாக வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்!

முன்னதாக, அட்லி-விஜய்யின் முந்தைய படமான ‘மெர்சல்’ படம் வெளியாவதற்கு முன்பும் இதுபோல ட்விட்டர் எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories