சினிமா

மாற்றுத்திறனாளி திருமூர்த்தியின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அஜித் ரசிகர்கள்... குவியும் பாராட்டு!

பார்வையற்ற சிறுவனான திருமூர்த்தியின் பாடும் திறனை அஜித் ரசிகர்கள் வெளிக்கொண்டு வந்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மாற்றுத்திறனாளி திருமூர்த்தியின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அஜித் ரசிகர்கள்... குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நொச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மகன்தான் திருமூர்த்தி. பர்கூரில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளியில் படித்துவந்த திருமூர்த்தியை தனியாக பள்ளியில் விட அஞ்சியதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னுடனயே வைத்து கவனித்து வந்துள்ளார் தந்தை திருமால்.

பிறவியிலேயே பார்க்கும் திறனை இழந்த திருமூர்த்தி இசை நயமும், குரல் வளமும் கொண்டவராகத் திகழ்ந்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் திருமூர்த்தி. 17 வயதே ஆன திருமூர்த்தி வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே தனது இசைத் திறனை மேம்படுத்தி வருகிறார். இதுவரை நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களை தனது குரலால் பாடி அசத்தியும், பார்வையாளர்களை அசரவைத்தும் வருகிறார்.

மாற்றுத்திறனாளி திருமூர்த்தியின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அஜித் ரசிகர்கள்... குவியும் பாராட்டு!

இந்நிலையில் சமீபத்தில், அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே...’ பாடலை பாடி அசத்தியுள்ளார் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி. இதனை வீடியோ எடுத்துள்ளார் நொச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற நபர். அதன் பிறகு, அதேபகுதியைச் சேர்ந்த மதன் குமார் என்ற அஜித் ரசிகருக்கு அருண்குமார் அந்த வீடியோவை அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, திருமூர்த்தி பாடிய வீடியோவை மதன்குமார் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இது வைரலானதும், ட்விட்டர், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூகவலைதளங்களிலும் வைரலானது. பின்னர், திறமையுள்ள சிறுவனின் எதிர்காலம் நல்லபடியாக அமையும் வகையில் ட்விட்டரில் வைரல் வீடியோவை பகிர்ந்த நபர் ஒருவர் ட்விட்டரில் பாலா என்ற நபர் கண்ணான கண்ணே பாடலை பாடிய சித் ஸ்ரீராமையும், இசையமைத்த டி.இமானையும் குறிப்பிட்டு, வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி திருமூர்த்தியின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அஜித் ரசிகர்கள்... குவியும் பாராட்டு!

இதற்கு உடனடியாக ரிப்ளை செய்த டி.இமானும், வெகு விரைவில் திருமூர்த்தியை சினிமாவில் பாட வைப்பதாக உறுதியளித்தார். இந்த உடனடி உத்தரவாதத்துக்கு டி.இமானை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனையறிந்த அஜித் ரசிகர் மதன், திருமூர்த்தியின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், “அஜித் படத்தில் வந்த பாடலை பாடியுள்ளார் என்பதால் அஜித் ரசிகர்கள் உள்ள வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களில் பகிர்ந்தேன். அதனை அவர்கள் பார்த்துவிட்டு அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக்கியுள்ளனர்.

அஜித் ரசிகர்கள் இல்லாமல் இந்த அளவுக்கு சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். அதில் என்னுடைய பங்கும் உள்ளது என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் மதன்.

மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியின் திறமையை அடையாளம் கண்டு நல்ல இடத்தில் சேர்த்த அஜித் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories