தமிழ்நாடு

சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு! : குறைகளை கேட்டறிந்த தமிழ்நாடு அரசு!

உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு! : குறைகளை கேட்டறிந்த தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக 10.03.2026 அன்று கூட்டம் நடத்தி பிரதமர் மோடி அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். 

போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதைத்தொடர்ந்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரை இதுதொடர்பாக உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட ஆணையிட்டார்கள்.  

சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு! : குறைகளை கேட்டறிந்த தமிழ்நாடு அரசு!

அதன்படி நேற்று (11.03.2026) தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோல் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 2 கோடியே 42 இலட்சத்து 46 ஆயிரத்து 960 வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்புகளும் 4 இலட்சத்து
75 ஆயிரத்து 527 வணிக எரிவாயு இணைப்புகளும் உள்ளன. 
இதில் உணவகங்களுக்கு 27 ஆயிரத்து 329 இணைப்புகளும் தொழில் நிறுவனங்களுக்கு 54 ஆயிரத்து 116 இணைப்புகளும் கல்வி நிறுவனங்களுக்கு 15 ஆயிரத்து 703 இணைப்புகளும் அடங்கும்.

எரிவாயு இணைப்புகள் வழங்கும் மூன்று எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமையல் எரிவாயு உருளைகள்
25 நாட்களுக்குப் போதுமான இருப்பு உள்ளது என்றும் வணிக எரிவாயு உருளைகள் இருப்பு மிகவும் குறைவாகவுள்ளது என்றும் தெரிவித்தனர்.

நிறுவனங்களுக்குத் தங்கு தடையின்றி எரிவாயு விநியோகம் செய்யத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் உணவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு உருளைகள் வழங்கிட வேண்டும் என்றும் உணவக உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

விறகுகள் பயன்படுத்தல், மின்சாரத்தை மாற்றாகப் பயன்படுத்தல், எரிவாயு உருளைகளைச் சிக்கனமாகப் பயன்படுத்தல் போன்ற மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்வதாக உணவக உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எரிவாயு இணைப்பிற்கு மாற்றாக மின்சாரத்தைப் பயன்படுத்திட தேவையான உதவிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அனைத்து உணவு மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தங்களை அழைத்துக் கூட்டம் நடத்தியதற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories