சினிமா

சினி அப்டேட்ஸ் 5 : நாளை வெளியாகும் ‘காப்பான்’ சிங்கிள்... ஜோதிகாவின் ‘ராட்சசி’!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் சில...

சினி அப்டேட்ஸ் 5 : நாளை வெளியாகும் ‘காப்பான்’ சிங்கிள்... ஜோதிகாவின் ‘ராட்சசி’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. பிரெஞ்ச் பட ரீமேக்கா ‘கடாரம் கொண்டான்’?

கமல் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம்’ படம் மூலம், கோலிவுட் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜேஷ் செல்வா. இவர், தற்போது இயக்கிவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். விக்ரமுடன் இணைந்து கமலின் மகள் அக்‌ஷரா முக்கிய கேரக்டரில் நடித்துவருகிறார். ஏற்கெனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று ட்ரெய்லர் வெளியாகி வைரலானது.

சினி அப்டேட்ஸ் 5 : நாளை வெளியாகும் ‘காப்பான்’ சிங்கிள்... ஜோதிகாவின் ‘ராட்சசி’!

இப்படம் பிரெஞ்ச் படமான ‘பாயிண்ட் பிளாங்க்’ என்கிற படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, இந்தப் படத்தை ‘தி டார்கெட்’ என்கிற பெயரில் கொரியாவில் ரீமேக் செய்திருக்கிறர்கள். ராஜேஷ் செல்வாவின் முந்தைய படமான தூங்காவனமும் கூட ‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்கிற பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ‘காப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் நாளை ரிலீஸ்!

‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது படம் ‘காப்பான்’. சூர்யா லீட் ரோலில் நடித்திருக்கும் இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி, பொம்மன் இரானி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். தவிர, நாயகியாக சாயிஷா சைகல் நடித்திருக்கிறார்.

சினி அப்டேட்ஸ் 5 : நாளை வெளியாகும் ‘காப்பான்’ சிங்கிள்... ஜோதிகாவின் ‘ராட்சசி’!

‘காப்பான்’ படத்தில் பிரதமராக மோகன்லால் நடிக்க, அவரது முதற்கட்ட பாடிகார்டாக சூர்யா நடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துவருகிறது. படம் ஆகஸ்ட் 30-ல் ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் நாளை ரிலீஸாகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘சிறுக்கி’ எனும் பாடல் தான் அது. இந்தத் தகவலை பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

3. நயன்தாராவுக்கு அடுத்த ரிலீஸ்!

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ‘ஐரா’ திரைப்படம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக நயன்தாராவுக்கு ‘கொலையுதிர்காலம்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமே.

சினி அப்டேட்ஸ் 5 : நாளை வெளியாகும் ‘காப்பான்’ சிங்கிள்... ஜோதிகாவின் ‘ராட்சசி’!

ஹாரர் படமான இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். தயாராகி, நீண்ட நாளாக வெளியாகாமல் இருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது. அதில் படத்துக்கு‘யூ/ஏ’ சான்றிதழ் கொடுத்து ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது சென்சார் தரப்பு. ஆக, படத்தை இந்த மாதமே ரிலீஸூக்கு எதிர்பார்க்கலாம்.

4. நாளை ராட்சசி, அடுத்து ஜாக்பாட் : ஜோதிகா பட அப்டேட்!

‘செக்கச்சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ராட்சசி. அரசுப் பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்திருக்கிறார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.

சினி அப்டேட்ஸ் 5 : நாளை வெளியாகும் ‘காப்பான்’ சிங்கிள்... ஜோதிகாவின் ‘ராட்சசி’!

அடுத்ததாக, சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பில் ஒரு படம் நடித்துவந்தார் ஜோதிகா. ‘குலேபகாவலி’ பட இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி முக்கிய கேரக்டரில் நடித்துவந்த படம் தான் ஜாக்பாட். இந்தப் படத்துக்கு சென்சார் டீம் ‘யூ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

5. ஆகஸ்ட்டில் உறுதியான பக்ரீத்!

விக்ராந்த் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகிவரும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். படத்தின் போஸ்டர், டீஸர் வெளியாகி வரவேற்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸூக்கான பணிகள் பரபரப்பாக நடந்துவருகிறது.

சினி அப்டேட்ஸ் 5 : நாளை வெளியாகும் ‘காப்பான்’ சிங்கிள்... ஜோதிகாவின் ‘ராட்சசி’!

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்கு இசை டி.இமான். கோலிவுட்டில் இதுவரை ஒட்டகத்தை மையமாக வைத்து எந்தப் படமும் வெளியாகவில்லை. நிச்சயம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறது படக்குழு. படத்தை வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories