சினிமா

ரஜினி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!  

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 167-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!  
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 167-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, நாளை முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ளது, பட தயாரிப்பு நிறுவனமான லைகா.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது வரை படத்தின் நாயகியாக நயன்தாரா மட்டுமே தேர்வாகியுள்ளார் என்று மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories