Tamilnadu

கோவில் திண்டில் அமர்ந்தபடி திட்டம் தொடக்கம்... இத்தனை எளிமையாக ஓர் அரசு விழாவா? : பொதுமக்கள் வியப்பு!

"மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிராமத்தில் இன்று எளிமையான முறையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தில் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் இந்தத் திட்டத்திற்கான தொடக்கவிழா எந்தப் படாடோபமும் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.

கோயில் திண்டில் மக்களோடு மக்களாக அமர்ந்து விழாவைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எளியவர்களுக்கான இந்த அரசு எளிமையாகப் பணிகளை மேற்கொள்வது மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, மருத்துவ சேவை அளிப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

சுகாதாரத்துறையின் முக்கியமான இந்தத் திட்டத்தை தி.மு.க அரசு எளிமையாக நடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் முக்கிய உறுதிமொழியே இதுதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!