Tamilnadu

O2 கட்டமைப்பு இருந்தால் மட்டுமே 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு அனுமதி? - மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்ரமணியன் , ஜெம் லேப்ரோஸ்கோபி மற்றும் ரோபோட்டிக் குடலிறக்கம் மற்றும் வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்திற்கு 75% தடுப்பூசி பெறப்பட்டதாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 25% தரப்படுவதாகவும் தெரிவித்தவர்,

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்க்க ஒன்றிய அரசிடமிருந்து 90% தடுப்பூசி பெறப்படும் என்று தெரிவித்தார். 18வயது உள்ளவர்கள் தமிழகத்தில் 5 கோடியே 68 லட்சம் பேர் உள்ளதாகவும், அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஜெம் மருத்துவமனை கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் அதிகமானவர்கள் என்ற பெயரைப் பெற்று இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

குடலிறக்க சிகிச்சையில் முன்னணியில் உள்ள ஜெம் மருத்துவமனை ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையிலும் சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Also Read: “‘நீதிக்கட்சியின் நீட்சி’ என்றதும் துக்ளக் துடிப்பது ஏன்?” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

முன்னதாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தவிர்க்க ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் புதிதாக நிறுவப்பட்டு அதை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். அப்போது காவேரி மருத்துவமனை கொரொனா காலகட்டத்தில் நோயாளிகளை சிறப்பாக கவனித்து பாராட்டை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார் .

தமிழகத்தில் 100 படுக்கைகளுக்கு மேலான ஒரு மருத்துவமனையை திறக்க வேண்டும் என்கின்ற அனுமதியோடு துறையை அணுகினால் , 100 படுக்கைகள் உடனான மருத்துவமனையை புதிதாக உருவாக்கும் போது அதற்கு தேவையான ஆக்சிஜன் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே அந்த மருத்துவமனைக்கான அனுமதியை வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் என்றார் .

கொரோனா காலகட்டத்தில் மட்டுமல்ல நோயாளிகளுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பதால் தட்டுப்பாட்டை குறைக்கவும் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மருத்துவமனைகளில் உருவாக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் கொரொனா நோய் பரவல் மற்றும் ஆக்சிஜன் தட்டுபாடு இந்ததது. மே 7ஆம் தேதிக்கு பின் 730 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிசன் அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது, 900 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற நிலை மாறி தேவைக்கு அதிகமாகவே கையிருப்பு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பூசி தமிழக அரசு மருத்துமனைக்குதான் கிடைக்க வில்லை , ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைக்கிறது ஆகவே அதை மக்களுக்கு அதிக அளவில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ் , மையிலாபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ் உடன் இருந்தனர்.

Also Read: “தி.மு.க என்னும் ஆலமரத்திற்கு உதவும் அணிலாக இருப்பேன்” : தி.மு.கவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பேச்சு!