தமிழ்நாடு

“தி.மு.க என்னும் ஆலமரத்திற்கு உதவும் அணிலாக இருப்பேன்” : தி.மு.கவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பேச்சு!

“விரைவில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேரை தி.மு.கவில் இணைப்போம்” என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

“தி.மு.க என்னும் ஆலமரத்திற்கு உதவும் அணிலாக இருப்பேன்” : தி.மு.கவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார். மேலும், தி.மு.கவில் இணையவுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் கொண்ட தொகுப்பையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளித்தார்.

அ.தி.மு.கவில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியையும் தழுவினார்.

இந்நிலையில், தோப்பு வெங்கடாசலம் இன்று (ஜூலை 11) சென்னை அண்ணா அறிவாலயத்தில், தன் ஆதரவாளர்களுடன் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.

“தி.மு.க என்னும் ஆலமரத்திற்கு உதவும் அணிலாக இருப்பேன்” : தி.மு.கவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பேச்சு!

இந்த நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்ட தோப்பு வெங்கடாசலம், “தி.மு.க என்னும் மாபெரும் ஆலமரத்திற்கு உதவும் அணிலாக நான் இருப்பேன்” எனப் பேசினார்.

மேலும் பேசிய அவர், “தமிழகத்தின் மாபெரும் சக்தியாக தி.மு.க இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் வெற்றியை பெற முடியவில்லை என்ற உங்கள் ஏக்கத்தைப் போக்கும் அணிலாக நாங்கள் வந்திருக்கிறோம். உறங்கும் நேரத்தைத் தவிர உங்களுக்காக பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். சாதாரண தொண்டனுக்கு அருகிலேயே இருக்கை அமைத்து தோளில் தட்டிக்கொடுக்கும் தாயுள்ளம் கொண்ட தலைவர் மு.க.ஸ்டாலின். விரைவில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேரை தி.மு.கவில் இணைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories